ஐயா
வணக்கம்.இன்றைய முதியோர் இல்லங்கள் பற்றிய கேள்விக்கு உங்கள் பதிலை வாசித்தேன்.நம் நாட்டில் முதியோர்களுக்காக தனி மருத்துவம் உள்ளிட்ட துறைகள் உண்டா?இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த புரிதல்கள் இன்மை இன்றைய உலகத்திலிருந்து வயதானவர்களை அந்நியப்படுத்துகிறதா?
மேலைநாடுகளில் முதியோர்கள் வாழ்வியல் குறித்து தனி
துறையே அமைத்து அவர்களின் உடல்நலம்,உளநலம் சார்ந்த
ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஜெரன்டாலஜி என்ற பெயரில் தனியான துறையே
இயங்குகிறது.அத்தகைய தனித்தன்மை வாய்ந்த துறைகள் நம் தேசத்திலும் இப்போது வளர்ந்து வருகின்றன.சென்னையில் மருத்துவர் நடராஜன் என்னும் பத்மஶ்ரீ விருதாளர் இதற்கென்று பெரும்பணி ஆற்றி வருகிறார்
அதேநேரம் மேற்கத்திய வாழ்வின் சாயல்களும் அன்றாட வாழ்வின்தொழில்நுட்பங்க;ளும் இங்கு மலிந்து கிடக்கின்றன.அவர்களின் வாலிபத்திலோ நடுத்தர வயதிலோ அறிந்திராத கருவிகள் அவர்களுக்கு இன்று துணை புரிகின்றன
முதியோர் வாழ்வின் வலிகலந்த வேடிக்கை என்னவெனில்,அவர்களின்துன்பங்களுக்குக் காரணமான தொழில்நுட்பமும் அறிவியலுமே அவர்களுடைய
மனக்காயங்களுக்கு மருந்தாகவும் இருக்கின்றன.எப்படியென்றால்,தொழில்நுட்ப வளர்ச்சியும் அயலக வேலை வாய்ப்புகளுமேகூட்டுக் குடும்பக் கூடுகள் கலைவதற்கான காரணிகள்.கிழக்கும் பறவைகள்மேற்கில் பறக்க அவையே காரணம். அதே தொழில்நுட்பமும் அறிவியலுமேமுதியவர்களின் தற்காலிகஆறுதலுக்கும் துணை செய்கின்றன.
அயல்நாடுகளில் கண்காணாத தேசங்களில் வாழ்வோடு போராடும்வாரிசுகளின் குரல்கள் அடிக்கடி ஒலிக்கும் அலைபேசிகளும்கணினித் திரையில் அவர்கள் அவ்வப்போது காட்சிதந்துஅன்புமொழி பேசுவதும் முதியவர்களின் மனக்காயங்களுக்கு மருந்துகள்.