ஆயுத சாத்திரம் அறத்தை மறந்தது
பாய்கிற கணையோ பின்வழி வந்தது
*
நேர்வழி அபிமன்யு தேர்வழி எனினும்
போர்வழி ஏனோ பாதை புரண்டது
*
துள்ளி யெழுந்த தூயனுக்கெதிராய்
வெள்ளிகள் தானே விரைவாய்ப் பாய்ந்தன;
*
ஒற்றை இரவில் ஓங்கிய துரோகம்
உற்றவர் வகுத்தனர் ஊழலின் வியூகம்
*
*
துரோணர் தடுத்தும் துரோகம் சூழ்ந்தது
வரலாறு இதனை வெட்கமென்றது
*
சரியாய் உடைத்தான் சக்கர வியூகம்
நரியார் நுழைத்த சூழ்ச்சிகள் ஏகம்!
*
தரையைத் தொட்டது தற்காலிகமே
விரைவில்..விரைவில்..சிம்மாசனமே
*
மவுன சாட்சிகள் மனதினில் உறுத்தும்
தவறின் தழும்பே தருமத்தை மலர்த்தும்.