தன்னில் அவளை ஒளியாக உணர்ந்து அவளின் அருளமுதத்தில்
முற்றாய் நனைந்து அந்த மௌனத்திலேயே அமிழந்து, சரியான தருணம்தாழ்திறக்க தனக்குள் தளும்பி வழியும் அந்த அனுபவம் தன்னையும்தாண்டி உடைப்பெடுப்பதையும் பெருக்கெடுப்பதையும் அபிராமி பட்டர்மௌனசாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க உருவான பனுவல்களேஅபிராமி அந்தாதி.
தை அமாவாசையில் சரபோஜி மன்னன் திருக்கடவூர் வந்ததும்,அன்னையின் திருமுகவிலாசத்தை மனத்தே வைத்து தன்னந்தனியிருந்த அபிராமி பட்டரிடம் என்ன திதி என்று வினவியதும்அவர் பவுர்ணமி என்று சொன்னதும் அந்தத் தருணத்தின் தாழ்திறப்புக்கானஏற்பாடுகள் மட்
எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும்
மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை. ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு.
“தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே”
இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில்பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமிஅந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை
விட்டுவிட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்?
இப்படி வேண்டுமானால் இருக்கலாம்.திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்குதிருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக்குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ளவாரணப் பிள்ளையார் அவர்.தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர்.
அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்
கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்று
கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்.
எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே
அபிராமிபட்டர்.அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில்
அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்திலேயே காட்டுவார் அபிராமி பட்டர். அந்தக் காட்சி
காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது.
தார், ஆண்களுக்குரியது.மாலை பெண்களுக்
கட்டப்படாதது தார். முனைகள் கட்டப்பட்டது மாலை.அதிலும்
கொன்றையந்தார் சிவபெருமானுக்கு
இரண்டும் ஒருங்கே சார்த்தப்பட்ட உமையொரு பாகராம் தில்லை ஊரரின்
புதல்வராகிய கார்மேனிக் கணபதியே
என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார்.
விநாயகப் பெருமானின் திருமேனி
நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும்
கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை
மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி.அந்த விநாயகர் திருவருளால் முகிலில்
இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய
அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக
அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார்
பட்டர்.
ஒரு நூலுக்கான காப்புச் செய்யு
அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும்இந்தப் பாடல் அமைகிறது.
(தொடரும்) |