அபிராமியை வணங்குவதால் ஏதேதோ பெருமைகள் எல்லாம்
சேரும் என்கிறீர்களே?அப்பட் பெருமைகள் சேரப் பெற்றவர்களை
எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று அபிராமி பட்டரிடம்
ஒருவர் கேட்டாரோ என்னவோ!
எங்கள் அன்னையை வணங்கும் அடியவர்களைப் பார்க்க வேண்டுமா?
பதினான்கு உலகங்களையும் படைத்துக் கொண்டும் காத்துக் கொண்டும்
அழித்துக் கொண்டும் திரிகிறார்களே! அவர்களைப் போய் பாருங்கள்
என்கிறார் அபிராமி பட்டர்.
அந்த விநாடியே அவருக்கொரு சிந்தனை ஏற்படுகிறது.அம்பிகையின்கூந்தலில் பூங்கடம்பு மலர்கள் மணக்கின்றன. அவளுடைய திருவடித்தாமரைகளோ நறுமணம் கொன்டவையாய்த் திகழ்கின்றன.அவளுடைய
அடியவர்களோ முதல் மூன்று தெய்வங்கள். இப்படியிருக்க அவளுடையதிருவடிகளில் என் நாவில் தங்கியதாலேயே குறையுடையதான என்
மொழிகளும் இடம்பெற்றிருக்கின்றனவே! இதைப்பார்த்தால் எனக்கேசிரிப்பு வருகிறதே ” என்கிறார் அபிராமிபட்டர்.
அம்பிகை உகந்தேற்கும் அபிராமி அந்தாதியை தன்னடக்கம் காரணமாய்தாழ்வெனும் தன்மை சொல்லி உருகி நிற்கிறார் அபிராமிபட்டர்..
தங்களிடம் இல்லாத பெருமைகளை இருப்பதாய் நினைப்பவர்கள்
சராசரி மனிதர்கள்.தங்களிடம் இல்லாத குறைகளை இருப்பதாய்
நினைப்பவர்கள் அருளாளர்கள்.
“குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன்; கோலமாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானியல்லேன்
நல்லாரோடு இசைந்திலேன்;நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லாது ஒழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்வேன்
இலம்பொல்லேன் இரப்பவர்க்கு ஒன்று ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே”
என்று தன் மீதே கற்பனையாய் ஒரு குற்றப்பத்திரிகையை வாசிக்கிறார்
திருநாவுக்கரசர்.அம்பிகையின் பெருமை அடியவர்களின் அருமை
அபிரமிபட்டரின் எளிமை ஆகிய் மூன்றும் சங்கமிக்கும் திருப்பாடல் இது.
“ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழலணங்கே!மணம்நாறும்நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
(தொடரும்)