காலை ஏழரை மணிக்கே திறக்கப்படும் பாய் கடைக்குள் இருந்து அந்த நண்பர் எட்டு மணிக்கெல்லாம் சிவந்த முகத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் எதையோ முணுமுணுக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். அவர் ஓர் இசைக்கலைஞர்.(ஜான் சுந்தர் அல்ல).மேடைகளில் பாடவேண்டும் என்னும் ஆசை கொண்டவர் (இளஞ்சேரலும் அல்ல)
ஆனால் அவர் சற்றுமுன் சாப்பிட்ட பாயாவின் எச்ச சொச்ச எலும்புத் துண்டுகளை தேடித்தேடி மென்று கொண்டிருந்தார். முகத்தில் உண்ட நிறைவை விட கடித்துத் துப்பிய நிறைவே காணப்பட்டது.விஷயம் வேறொன்றுமில்லை.மனிதர், ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு ஏர்டெல் சிங்கர் டைட்டில் தரப்பட்டது தொடர்பான சர்ச்சை வியூகத்தில் சிக்கி தடுமாறிக் கொண்டிருந்தார்.
பின்னணிப் பாடகர் ஒருவரை புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவர் போல முன்னிறுத்தியிருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. சற்றுமுன் சாப்பிட்ட பாயாவைப் போல.
அதேநேரம் அதை அவரால் வீட்டுக்குள் பேச முடியவில்லை.ஏனெனில் வயது முதிர்ந்த அவருடைய தாய்,அவருடைய தர்ம பத்தினி ( ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு தினமும் ஐந்து மெயில் ஓட்டுகளைப் போட்டு தர்மம் காத்த பத்தினி)
அவருடைய இரண்டு மகள்கள் அனைவருமே ஆனந்த் அரவிந்தாக்ஷனின் தீவிர ரசிகைகள்.”தீவிர” என்பதற்கு முன்னால் உங்களுக்கு ராசியான எண்ணிக்கையில் அதி அதி என்று சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே தன் அபிப்பிராயத்தை வீட்டில் தொலைக்காட்சியின் சந்நிதியில் நின்று சொன்னாலும் கூட அவர் தொற்றுக் கிருமி பற்றிய நோயாளி போல தனிமைப்படுத்தப்பட எல்லா வாய்ப்புகளும் உண்டு. இந்த நண்பர் ஓரளவு படிப்பவர். ஓஷோ எங்கேயோ ஓரிடத்தில் ” அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம்வராது. எலும்பைக் கடிக்கும் போது அந்த பலழுத்தத்தில் மன அழுத்தம் வெளியேறி விடுகிறது” என்னும் பொருள்பட எங்கோ எதுவோ சொன்னாராம். அப்போதுதான் பாய் கடையின் இடியாப்பம் பாயா நினைவுக்கு வந்து மனிதர் காலையிலேயே கிளம்பி வந்திருக்கிறார்.
இந்த விஷயம் குறித்து என் அபிப்பிராயத்தைக் கேட்டார். ஏனோ தெரியவில்லை, இந்த முறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் தொடரை நான் பெரும்பகுதி பார்க்கவேயில்லை.வழக்கமாக விடாமல் பார்ப்பவன் தான். ஒருமுறை பாதி நிகழ்ச்சியில் வீட்டுக்குள் நுழைந்தபோது ஓர் இளைஞர், ” வா மச்சான் வா” பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அவரை அப்போதுதான் பார்க்கிறேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மகபா வின் ஜாடையில் இருக்கவே அவர்தான் பாடுகிறார் போலும் என்று நினைத்தேன். பாடி முடித்தபின் நடுவர்கள் (பரவச நாயகன் ஶ்ரீநிவாஸ் உட்பட) அவரை ஆனந்த பரவசமாய் “ஆனந்த்-என்னப்பா -எப்படீப்பா ” என்றெல்லாம் பாராட்டும் போதுதான் அவர் பெயர் ஆனந்த் என்று தெரியும். உள்ளபடியே நன்றாகப் பாடினார்.
இறுதிச்சுற்று போட்டியின் கடைசிச் சுற்றைப் பார்த்தேன். நடுவர்கள் தேர்வுப்படி ராஜகணபதி என்று முதலில் அறிவித்தபோது அநேகரைப் போலவே அவர்தான் முதலிடமென்று நானும் நினைத்தேன். பிறகு ஃபரீதா இரண்டாம் இடம் ஆனந்தன் அரவிந்தாக்ஷன் முதலிடம் என்று அறிவித்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. அரவிந்தாக்ஷன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டதும் மகனைக் கட்டித் தழுவி , பெரும்பாலான ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்களின் அப்பாக்களைப் போலவே.”தமிழ்நாட்டு மக்களு..ஞான் மறக்கவே மறக்காது” என்று தழுதழுக்கும் வரை பார்த்தேன்.பிறகு தூங்கி விட்டேன்.
அதன்பின் அந்த சர்ச்சை தொடர்பாக தயாரிப்பு நிர்வாகி தந்திருந்த அறிக்கையையும் ஆனந்த் அரவிந்தாக்ஷன் முகநூலில் பதிந்திருந்த குமுறலையும் வாசித்தேன். ஒருசில பட வாய்ப்புகள் பெற்றிருந்த போதிலும் தனக்கோர் அடையாளம் வேண்டுமென்ற தவிப்பையும் இந்தப் போட்டிக்கான கனவையும் உழைப்பையும் விலாவாரியாகவே எழுதியிருந்தார். சக போட்டியாளர்கள் இதனை அறிந்திருந்தார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
முழுநேர இசைக்கலைஞரின் முகமும் முத்திரையும் பதிய இந்நிகழ்ச்சி களமமைத்துத் தருமென்றால் அது நல்ல விஷயம்தானே என்று தோன்றியது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ” தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” போட்டித் தொடரில் ஓர் அமர்வுக்கு நடுவராகப் போயிருந்த போது , பங்கேற்பாளர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட பேச்சாளர் என்பதையும் கவனித்தேன். ஒருசில தொலைக்காட்சிகளின் பண்டிகை நாள் பட்டிமன்றங்களில் பங்கேற்றவர். ஆனால் அவருக்கு இந்தப் போட்டியின் மூலம் கூடுதல் அங்கீகாரம் கிடைத்தால் அதில் தவறென்ன ?
ஆனந்த் அரவிந்தாக்ஷன் விஷயத்திலும் எனக்கு இப்படித்தான் தோன்றியது.அதேநேரம் இந்தப் போட்டியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டும் பரவலாக சொல்லப்படுகிறது. இது தமிழகம் என்னும் எல்லைக்குள் மட்டும் நடத்தப்படுகிறதா என்ன? வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் கூட போட்டியாளர்கள் வந்திருந்து, தங்கியிருந்து வெற்றி பெறுகிறார்கள். டி.எம்.எஸ்., பி.சுசீலா .பி.பி.எஸ் சில் தொடங்கி எவ்வளவோ பிரபல பாடகர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே தாய்மொழி அடிப்படையிலோ மாநில அடிப்படையிலோ நாம் வேறுபாடு பார்க்க வேண்டியதில்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என உலகுக்குச் சொன்னவர்கள் நாம்.
இந்தப் போட்டியில் எனக்குப் புரியாத ஒரஏ விஷயம், வெற்றியாளர்கள் நடுவர் தேர்வுப்படி ஒருவரும் டைட்டில் வின்னர் ஒருவரும் என அறிவிக்கப்பட்டதுதான். அதாவது, ராஜகணபதி நடுவர்களால் முதலிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் முதலிடம் பெற்றாரா? அல்லது ராஜகணபதி மூன்றாமிடத்திற்கு நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டாரா என்பதுதான்.
இந்தக் கேள்வியையும் விளக்கங்களையும் நான் முன் வைத்தவுடன் இடியாப்பம் பாயா சாப்பிட்ட நண்பருக்கு இது புது இடியாப்பச் சிக்கலோ என்று தோன்றிவிட்டது. அவருக்கு ஒரு குடுவை ஜெலூசிலும்,ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு நம் நல்வாழ்த்துகளும் உரியன.
இசைக்கு மொழி இல்லை இனம் இல்லை நல்ல விளக்கம் .கவிஞருக்கும்
சூப்பர் சிங்கர் பார்க்கும்/ கேட்கும் விருப்பம் எல்லாரையும் போல. நெடுந்தொடர்களால் குடும்பங்கள் (பல) தங்கள் நேரத்தை காவுகொடுக்கும் சமயத்தில் .விஜய் டீவி- சில நிகழ்ச்சிகள் அற்புதம் .1. ஒரு வார்த்தை ஒரு லட்சம் (தமிழ் மொழி ஆர்வம்) 2. கனெக்சன் (மூளைக்கு வேலை )3. நீயா நானா ? (சமூக பிரச்சனைகள் அலசல்) 4 அது இது எது ( ஹாஸ்யம் ) 5. சமையல் சமையல் (வெ.பட்)
ஆனாலும் அவர்களும் சமீப காலங்களில் சற்று அத்துமீறல் செய்வது சரியல்ல (இரட்டை அர்த்த வச னங்கள் ) அதுவும் கலக்கப் போவது யாரு கொஞ்சம் ஓவர் .
vijay tv has mentioned that Anand Aravindhakshan is not the only one who has sung in films. Anybody who has questioned the decision have been remarked as “vested interests”. I am also a fan of Anand and voted for him. I am not a vested interest. But the public are speaking not so much against Anand but public votes would have certainly gone in favour of Arjun, Priya jerson ,(in wild card rounds ) and Raja Ganapathy in the finals and the likes if they were aware that Anand was a n accomplished singer and from that point of view hiding a significant information might amount to cheating. (never ever once was it revealed in the show that Anand has actually sung in films. The question of Anand cheating Vijay TV does not come into picture because Vijay TV has mentioned they are aware of this.But Vijay TV misleading public is still a valid accusation)
To clear the air, it would be nice if Vijay TV substantiates itself by announcing who the other singers were who have sung in films and appeared in the TOP10 OR TOP20 at least.