அம்பிகையின் திருவுருவை மனத்தில் குறித்து அதைச் சிந்திப்பதே
உயர்ந்த தியானம் என்பார் அபிராமி பட்டர்.அதன் முதல் படிநிலையாக
அம்பிகையின் திருக்கரங்களில் கரும்பும் தாமரையும் இருப்பதை முதல்காட்சியாகக் காட்டுகிறார்.
அம்பிகையின் தாமரைத் திருமேனியில் வெண்முத்து மாலையும்
இடையில் பலமணிகள் கொண்ட சங்கிலியும் கோர்க்கப்பட்டிருப்பதை
அடுத்த காட்சியாகக் காட்டுகிறார்.
அம்பிகைக்குத் தன் திருமேனியில் இடப்பாகத்தைத் தந்த பெருமானோ
திசைகளை மட்டுமே ஆடையாக அணியும் திகம்பரன் என்னும் அழகியமுரணும் இந்தப் பாடலில் இடம்பெறுகிறது.
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே