இருப்பதை உணர்த்துவாள்
அம்பிகையின் திருவுருவை படிப்பவர் மனங்களில் பதிக்கும் விதமாக அந்தாதியின் இந்தப் பகுதி அமைகிறது.
வேதங்களே சிலம்பாக ஒலிக்கும் திருவடிகளைக் கொண்டவள். கைகளில் ஐந்து மலர்க்கணைகள் கொண்டவள். இனிய சொற்களைச் சொல்லும் திரிபுரசுந்தரி செவ்வண்ணத் திருமேனி கொண்டவள். தீமை செய்த அரக்கர்கள் அஞ்சும் விதமாக கைகளில் மேருவை வில்லாக ஏந்தும் தழல் வண்ணராகிய சிவபெருமானின் செம்பாகத்தில் குடி கொண்டிருப்பவள் என்பது இந்தப் பாடல் தருகிற வர்ணனை.
வேதங்களே அவளுக்கு சிலம்பு. சில இடங்களில் குறிப்பாக ஸ்ரீ சக்ரம் வைத்து பூûஐ செய்பவர்கள் வீடுகளில் சலங்கையொலி கேட்பது வழக்கம்.
குரு வழிபாட்டில் இருக்கும் பலரும் தாங்கள் இருக்கும் இடங்களில் திருநீற்று மணத்தை உணர்வார்கள். தெய்வத்தின் சூட்சுமமான பிரசன்னத்தையே இவை குறிக்கும்.
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள், தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.