உன்னுடைய பீடத்தை நீயே அமை;
உன்னுடைய வேதத்தை நீயே சமை;
உன்வலிமை உன்சிறுமை நீயே நினை;
உன்கனவு மெய்ப்பட நீயே துணை;
பொன்னுரசிப் பார்க்கையிலேபுரியுமதன் தரம்
மின்னுரசி மழைபொழிய மண்ணெல்லாம் வளம்
உன்னைவிதி உரசுகையில் உணர்த்திடு உன பலம்
உன்னைநீ உணருவதே உனக்கென்றும் நலம்
கல்லுக்குள் சிலையிருக்கும்; கண்டறியும் உளி
நெல்லுக்குள் மணியிருக்கும்; நீக்கிடுக பசி
சொல்லுக்குள் பொருளிருக்கும்; உணர்ந்தவர்க்கே ஒளி
எல்லையில்லா உன்பெருமை எட்டுவதே வழி
விலலிலிருந்து அம்பொன்று விடைபெறலே விதி
எல்லாமும் இடம்பெயரும் இவ்வுண்மை மதி
நில்லென்று கூவுவதால் நில்லாது நதி
பொல்லாதார் பேசட்டும் புகழ்ச்சுவடு பதி