ஆயிரம் கனவுகள் அணிவகுக்கும் & நீ
ஆணை பிறப்பிக்கக் காத்திருக்கும்!
பாய்கிற குதிரையைத் தூங்கவிட்டால் & அது
பாரம் சுமப்பதை மறந்திருக்கும்!
ஓய்வெனும் பெயரில் உன்துடிப்பை & நீ
ஓயச் செய்திடக் கூடாது!
பாயும் நதியெனப் புறப்படு நீ & உன்
பாதையை வகுத்திடப் போராடு!
பாதம் பதிக்கும் உறுதியிலே & உன்
பாதையின் பள்ளங்கள் மாறிவிடும்!
தேசங்கள் ஏதும் நிகழ்ந்தாலும் & உன்
செயலில் காயங்கள் ஆறிவிடும்!
வீதிகள் யாரோ வகுத்ததுதான் & அட
வாழ்வின் வெற்றியும் அப்படித்தான்!
சேதிகள் சொல்லும் பூங்காற்றில் & உன்
சரித்திரம் பரவிட வழியிதுதான்!
உந்தன் இலக்கும் உன்கனவும் & இந்த
உலகில் மற்றவர் கையிலில்லை!
எந்தச் சிகரமாய் இருந்தாலும் & நீ
இதயம் துணிந்தால் சிரமமில்லை!
வந்தோம் போனோம் என்பவர்கள் & ஒரு
வரியாய்க் கூட வாழ்வதில்லை!
வந்ததன் நோக்கம் உணர்ந்துகொண்டால் & நீ
வரலாறாவதில் ஐயமில்லை!