குப்பைகள் உரமாய் ஆகிறபோது
கற்பனை நிஜமாய் ஆகாதோ – ஒரு
கைப்பிடி தானியம் எறும்புகள் சேர்க்கும்
நம்மால் சேமிக்க முடியாதோ?
சொந்த முயற்சியில் சிலந்திதன் வலையை
செய்துகொள்வதைப் பார்த்தாயோ – நீ
சிந்தும் வியர்வையில் எந்த செயலையும்
எளிதாய்த் தொடலாம் கேட்டாயோ?
வாழும் வாழ்க்கை நிரந்தரமல்ல
வகுக்கும் செயல்களை நிலையாக்கு!
தாழ்வும் உயர்வும் தானாய் வராது
உனது வெற்றியை உருவாக்கு!
தாண்டிச் செல்லும் நொடிகளின் முதுகில்
தனிப்பெரும் வெற்றிகள் ஏற்றிவிடு
மீண்டும் மீண்டும் உன்னைத் தூண்டி
மாறா விதியையும் மாற்றிவிடு!