உலகம் என்கிற வெற்றிக் கோப்பை
உள்ளது உனக்காக!
சிலசில தோல்விகள் வருகையில் உள்ளம்
சிதறுவது எதற்காக?
வாழ்க்கை வீசும் வேகப்பந்துகள்;
வெறிகொண்டு நொறுக்கிவிடு!
பாறை போன்றது வாழ்க்கை & அதனை
உளிகொண்டு செதுக்கிவிடு!
ஆடும் களங்களில் ஆளுமை செலுத்து
அஞ்சி மயங்காதே!
நாடக மனிதர்கள் பூடகச் சொல்லை
நினைத்துக் கலங்காதே!
காலம் உன்னை நம்புவது உண்மை
கைகள் நடுங்காதே!
நாளை உன்பேர் சாதனைச் சின்னம்
நொடியும் தயங்காதே!
ஆட்டம் தொடங்கிய பின்னால் எதற்கு
வாட்டம்? முணு-முணுப்பு?
நாட்டம் கொள்பவர் மனங்களில் உன்புகழ்
நேரடி ஒளிபரப்பு!