வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
“உங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்த வேண்டியது, நேரம் குறித்த விழிப்புணர்வு. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்க, குதிரைபோல ஒடுங்கள். கால நிர்வாகத்தின் கைகளில் கடிவாளத்தைத் தந்துவிட்டு!” போதித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.
“அப்படி இருந்தால் என்ன நடக்கும்?” மாணவர் கேட்டார். “அப்படி இருந்தால், காலம் ஒருநாள் குதிரையாகும். அதன் கடிவாளம் உங்களை சேரும். காலத்தை யார் மதிக்கிறார்களோ அவர்கள்தான் காலம் மதிக்கும்படி உயர்கின்றார்கள். காலகாலமும் நிலைக்கும்படி காரியங்கள் செய்கிறார்கள்” என்றார் அந்த ஆசிரியர்.
காலம் தவறாமல் காரியம் செய்யுங்கள் நாளும், ‘உங்கள் கால்விரல் நுனிகளில் ஒலிக்கட்டும், காலத்தின் தாளம்!’