வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
“உழைக்கும் உரிமை இருப்பவர்களுக்கு களைப்படையும் உரிமை இருக்கிறது” என்றார் ஓர் அறிஞர். அந்த அறிஞர் வேறு யாருமில்லை. நான்தான். உடலுழைப்போ செயலுழைப்போ இல்லாமல் படுத்தால் அன்றிரவு சரியாகத் தூக்கம் வராது.
களைப்படையாதவர்களுக்கு ஏன் கண்ணுறக்கம் வருவதில்லை தெரியுமா? முழு நாளிலும் எதையும் முக்கியமாய் செய்யவில்லையே என்ற எண்ணம் முள்ளாய் படுக்கையில் உறுத்துகிறது. மனசாட்சியை உசுப்புகிறது.
உலகின் மிக உயர்ந்த போதை, உழைப்பால் வருகிற களைப்பு. அந்தக் களைப்பால் கொள்கிற கண்ணுறக்கம் அந்த உறக்கத்தில் வருங்காலம் குறித்து வருகிற வண்ணக் கனவுகள்.
இந்த போதையின் உச்சம் தொடுங்கள். வாழ்விலும் உச்சம் தொடுவீர்கள்.