வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
முதல் வெற்றி பரவசம் கொடுக்கும் பதட்டமும் கொடுக்கும். பெற்ற வெற்றியால் பரவசமும், அதைத் தக்கவைக்க வேண்டுமே என்ற பதட்டமும் இயல்பு. அடுத்தடுத்து வருகிற வெற்றிகள் அங்குலம் அங்குலமாய் நம்பிக்கை வளர்க்கும்.
வருகிற வெற்றிகள் எப்படி வந்தன என்கிற சூட்சுமம் உங்களுக்குப் புரிபடுகிறபோது உங்கள் வாழ்க்கையே வெற்றிச் சூத்திரங்களின் விளக்கமாய் மாறிப் போகிறது.
சிந்தனையின் சீர்மை, திட்டமிடும் கூர்மை, செயல்படுத்தும் உறுதி ஆகிய அம்சங்கள் அணிவகுக்கும் போது நீங்கள் வெற்றி பெற்றவர் என்ற நிலையைக் கடந்து வெற்றிகளை உற்பத்தி செய்பவராய் உயர்கின்றீர்கள்.
சாதனையாளர்கள் செயல்புரியும் அலுவலகத்தின் வாசலில், கண்ணுக்குத் தெரியாமல் சுழற்றி விடப்பட்டிருக்கும் வெற்றியின் செருப்புகள்.