வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
சூரியனின் ஒளியைப் பெறுவது சந்திரன். அதுபோல் ஒரு நிறுவனத்தின் உச்சநிலையில் இருப்பவர்களின் உத்தரவுகளைப் பெறுபவர்கள் இடைநிலை அதிகாரிகள்.
ஒரு காரியம் நிகழ வேண்டுமென்றால் சந்திரனை சரிக்கட்ட நேரம் செலவழிப்பீர்களா, அல்லது சூரியனிடம் சொல்லி விடுவீர்களா என்பதில்தான் உங்கள் தொடர்புகளின் வலிமை இருக்கிறது.
உச்சத்தில் இருக்கும் மனிதர்களுடன் நீங்கள் எந்த நோக்கமும் இன்றி வளர்த்தெடுக்கும் நட்பு, காரியங்கள் ஆக வேண்டியிருக்கும் போது இயல்பாக கைகொடுக்கும்.
கீழிருந்து மேல் நோக்கிப் போவது, எப்போதுமே போராட்டம். மேலிருந்து கீழ்நோக்கி வருவதே இயல்பான நீரோட்டம்.
உங்கள் தொடர்புகளை நீரோட்டம் போல் நிகழ்த்துங்கள்.