வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….

தலைநிமிர வேண்டுமென்று தாளாத கனவு துரத்தும் பொழுது தப்புத் தப்பாய் முயற்சி செய்தாவது முன்னேறத் துடிப்போம்.

இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத்தடுமாறி நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும் சுவரைத் தட்டிக்கொண்டே நகர்ந்தான். ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.

அடித்தளத்திலிருந்து முயலும்போது ஆரம்ப காலத் தடுமாற்றங்களை எவரேனும் ஏளனம் செய்தாலும் தளர்ந்து போகாதீர்கள்.

சுவர்களைத் தட்டுபவர்கள் கதவை ஒருநாள் எட்டுவார்கள். கதவு திறக்கும் வழிகள் பிறக்கும் என்பதை காலம் காட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *