வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….

இது, கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் நம்முடைய பிம்பம் நம்மைக் கேட்கிற கேள்வி. நம்மைப் பற்றி அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் அவரவர் அபிப்பிராயங்கள். நண்பர்கள் போற்றுவதும் பகைவர்கள் தூற்றுவதும் அவரவர் அபிப்பிராயங்களே தவிர, நாம் யார் என்கிறகேள்விக்கான விடை நமக்கு மட்டுமே தெரியும்.

தன் பலங்களை மறந்து தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்கள் ஒருவகை. அவர்கள் அடியவர்களாய் நினைக்கப்படுகிறார்கள். அடக்கத்துக்காகவே மதிக்கப்படுகிறார்கள். தங்கள் பலவீனங்களை உணர மறுப்பவர்கள் இன்னொரு வகை. அவர்கள் அன்றும் இன்றும் சமூகத்தின் மனசாட்சியால் நிராகரிக்கப்படுகிறார்கள்.

நல்லவரை கெட்டவர் என்று கணக்கிட்டோ கெட்டவரை நல்லவர் என்று மதிப்பிட்டோ மற்றவர்கள் ஏமர்ந்து போகலாம். நம்மை மதிப்பிடுவதில் நாம் ஒருநாளும் ஏமர்ந்து போகக்கூடாது.

வாழ்க்கை என்னும் தேர்வில், உங்களுக்குத் தரப்படுகிற வினாத்தாளில் ஒரேயரு கேள்விதான் இருக்கிறது… நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *