வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….

“எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ, எங்கள் தீபங்களில் ஒளி வந்தது, அது எந்தத் கைகள் தந்த ஒளியோ” என்றொரு பாடல் உண்டு.

ஒவ்வொரு காற்றுக்கும் கூட திசை உண்டு. கிழக்கிலிருந்து வருவது கொண்டல், வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வருவது தென்றல், மேற்கிலிருந்து வருவது கோடை என்று, கண்டறியாத காற்றுக்கும் பெயர் உண்டு.

ஆனால் தலையைத் தின்னும் சிக்கல் ஒன்றில் தடுமாறித் தவிக்கும்போது எந்தத் திசையிலிருந்து தீர்வு வரும் என்பது தெரியாதது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அந்த சிக்கலை உங்கள் உள்ளத்துக்குள்ளேயே வைத்து அவதிப்படும் வரை சிக்கல் சிக்கலாகத்தான் இருக்கும்.

அந்த சிக்கலை உங்கள் உள்ளத்திலிருந்து வெளியோ எடுத்து வைத்து, தீவிரமாய் ஆராய்ந்தால், தீர்வு எந்தத் திசையில் இருந்தும் வரும்.

சிக்கலை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக் தடுமாறாதீர்கள். சிக்கலுக்கான தீர்வு வெளியே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *