வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
கடந்த கால எச்சங்களை சாம்பலாக்குவது நெருப்புக்கு முடியும். ஆனால் சோம்பல் என்னும் கொடு நெருப்பைப் பரவவிட்டால் அது எதிர் காலத்தையும் இப்போதே சாம்பல் ஆக்கி விடும் எச்சரிக்கையாயிருங்கள்.
நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய ஒன்றை சோம்பல் காரணமாக தள்ளிப் போடுவீர்களென்றால், உங்கள் எதிர் காலத்தை இப்போதே சீர்குலைக்கிறீர்கள்.
சின்னச் சின்னதாய் வேலைகள் செய்து கொண்டே இருக்கும் போது நீங்கள் ஏதோ ஒரு தளத்தில் இடைவிடாமல் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். சோம்பிப் போய் அமர்ந்தால் உருவாகிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தையும் இப்போதே இழந்து விடுவதாகப் பொருள்.
உங்கள் பழைய சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் செயல்திறன் உயிர்த்தெழட்டும். நிகழ்காலத்தில் உங்கள் செயல்பாடு எதிர்காலத்தை எழுப்பிக் காட்டட்டும்.