வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….
உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் அதன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் யாருமே புதையல் காக்கும் பூதங்கள் தான்.
தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, செய்ய முடிந்த நல்ல விஷயங்களை செய்வது வரைக்கும், எல்லாமே உங்களை வெளிப்படுத்துவதால் மட்டுமே சாத்தியம்.
“எனக்கு அதிலே சின்ன வயசிலிருந்தே ஆர்வம். வளர்த்துக்காம விட்டுட்டேன்.” இதை எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் சொல்லி வந்திருப்பார்கள்.
இவர்கள் தங்கள் புதையலை எடுக்க விடாமல் தங்களைத் தாங்களே தடுக்கிற பூதங்கள். பயன்படுத்திக் காட்டாத எந்தத் திறமையும் தங்களுக்கு இருப்பதாய் சொல்லிக் கொள்வதில் பொருளில்லை.
உங்களுக்குள் இருக்கும் உன்னதத் திறமையை உலகுக்கு வெளிப்படுத்துங்கள். புதைந்து போகும் வரைக்கும் புதையலை பூட்டி வைத்துக் கொண்டிருக்காதீர்கள்.