வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான சறுக்கல்களுக்குக் காரணம் கவனக் குறைவு. மிகச்சிறிய விஷயம் ஒன்றில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிற பாடத்தை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமாகக் கற்றுக் கொடுத்திருக்கும்.
வாழ்வின் மிக முக்கியமான பாடமே இதுதான். ஏமாற்றங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை சிந்தித்து மனிதர்கள் தங்களை சீரமைத்துக் கொண்டால் வாழ்க்கை மிகச் சுலபம் என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
இந்தக் கவனக்குவிப்பை வா-ழ்வில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுதான் ஏமாற்றம் என்பது. ஏமாற்றங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு ஏமாறாமல் இருக்கும் வழிவகைகளை நடைமுறைக்குக் கொண்டுவர முயலுங்கள்.
அனுபவம் என்பது எடுத்து வைக்கும் அடுத்த அடியை செப்பனிட்டுத் தருகிற கோட்பாடு. ஏமாற்றம் என்பதுகூட அப்படியோர் ஏற்பாடு.