வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சீட்டு விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றுண்டு. கலைந்து கிடக்கும் சீட்டுகள் நடுவில்தான் தங்கள் வெற்றிக்கான துருப்புச் சீட்டுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆட்டக்காரர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
சொல்லப்போனால், சீட்டுகளைக் கலைத்துப் போட்ட பிறகுதான் அவர்களுடைய ஆட்டமே ஆரம்பமாகிறது.
ஆனால் மனிதர்கள் பலர் தங்கள் கனவுகள் ஏதேனும் கலைந்துபோனால் கலைந்து போகிறார்கள். எல்லாமே –முடிந்து விட்டதுபோல் எண்ணி இடிந்து போகிறார்கள்.
கலைந்து போன சீட்டுகளிலிருந்த தங்கள் வெற்றியை சீட்டாடுபவர்கள் கட்டியெழுப்புவது போலக் கலைந்து கிடக்கும் கனவுகளை சீர்செய்வதன் மூலம் மனிதன் தன் வெற்றியைக் கட்டமைக்க முடியும்.
ஒன்று கலைந்து விட்டது என்பதாலேயே அது முடிந்துவிட்டதாய்ப் பொருளில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பமாகிறது.