வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
உங்களுக்கு வேண்டாத ஒருவரிடம் ஏதும் திறமை இருக்குமென்றால், அதைப் பாராட்டத் தயங்காதீர்கள். அது வேறு, இது வேறு.
உங்களை அவமானப்படுத்திய ஒருவர் ஆபத்தில் இருந்தால், உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவரை மீட்கப் பாருங்கள். அதுவேறு, இதுவேறு.
உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், பிறருக்குத் தீங்கு செய்ய முற்பட்டாலோ தவறுகள் ஏதும் செய்தாலோ பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அது வேறு இது வேறு.
உங்களிடம் பல நிறைகள் இருக்கும்போது சில குறைகளுக்காக உங்களை நீங்களே சபித்துக் கொள்ளாதீர்கள். அது வேறு இது வேறு.
உங்களால் முடியாத ஒன்றை, முகதாட்சண்யம் கருதி முடியாது என்று சொல்லத் தயங்காதீர்கள். அது வேறு இது வேறு.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக, பொது நன்மை ஏற்படும் ஒன்றைத் தடுக்க முற்படாதீர்கள். அது வேறு இது வேறு.
ஒரு நண்பன் உங்களுக்கு துரோகம் செய்திருந்தாலும் அடுத்தவர்கள் முன் விட்டுக் கொடுக்காதீர்கள். அது வேறு இது வேறு.