வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஒவ்வொருவர் முதுகும் ஒரு விதத்தில் ஓர் அறிவிப்புப் பலகைதான். உங்கள் முதுகுக்குப் பின்னால் உலகம் எப்படியும் பேசத்தான் போகிறது.
அது என்ன பேசும் என்று தீர்மானிக்கும் உரிமை உங்களுக்குத்தான் இருக்கிறது.
உங்களை வியந்தும் பேசலாம். விமர்சனமும் செய்யலாம்.
உங்கள் செயல்கள் உலகில் என்ன விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன என்று கண்டுணர அற்புதமான அளவுகோல், மற்றவர்கள் உங்கள் முதுகில் குத்தும் முத்திரை.
நீங்கள் என்ன விதமான முத்திரையை பெற விரும்புகிறீர்களோ, அதற்குத் தகுந்தாற்போல் உங்கள் நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ளுங்கள.
உங்கள் முதுகில் குத்தப்பட்ட முத்திரைகள் உங்களுக்குத் தரப்படும் தரச்சான்று முத்திரைகள். ஒருவேளை யாராவது துரோகம் செய்யும் விதமாக உங்கள் முதுகில் குத்தினால் அவர்கள் என்ன முத்திரை குத்துகிறார்கள் தெரியுமா?
நீங்கள் ஏமாளி என்கிற முத்திரையைக் குத்துகிறார்கள். அது நீங்களே ஏற்பாடு செய்து கொண்ட முத்திரைதான்.
நீங்கள் பெற விரும்பும் -முத்திரையை முதுகில் பெற எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.