வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
நீங்கள் செல்லும் பாதை நீங்களே போட்டதா? பிறர் உருவாக்கியதா? அதாவது முயற்சிகளை உன்னிப்பாய் கவனித்து அவர்கள் பாதையில் போனீர்களா? நீங்களே ஒரு பாதையை உருவாக்கினீர்களா?
இரண்டுமே இருவேறு விதங்களில் முக்கியமானவைதான். உங்கள் மேல் யாருடைய தாக்கம் இருக்கிறதோ, யார் உங்கள் ஆதர்சமோ, அவர்களை அவர்களின் காலடிச் சுவடுகள் கலையும் முன்பே பின்பற்றி நீங்களும் வெற்றியை எட்டியிருப்பீர்கள்.
அதேபோல, நீங்கள் புதிதாக ஒரு பாதை உருவாக்கியிருந்தால், அதுவும் உங்களைப் பின்பற்றிப் வருபவர்களை உருவாக்கும்.
பாதத் தடங்கள் பதிவதன் மூலமாகவே ஒரு பாதை உருவாகிறது. நீங்கள் நம்புகிற பாதையில் உங்கள் சுவடுகளை அழுந்தப் பதியுங்கள்.
நீங்கள் பின்பற்றுபவர்களும் இருப்பவர்கள். உங்களைப் பின்பற்றுபவர்களும் இருப்பார்கள். அந்தப் பாதை சரியானதென்றால், அதில் உங்கள் சுவடுகள் சூடு மாறாமல் இருக்கும்.