வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
விலங்கின் உந்துதல் (Animal Instinct) என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற அம்சம். இது முழுக்க நல்லதுமல்ல. முழுக்க கெட்டது மல்ல. சிலர் விலங்கின் உந்துதல் குணத்துக்கு முக்கியத்துவம் தந்து தங்கள் நலனை மட்டுமே பாதுகாத்துக்கொள்ள -முயல்வார்கள்.
சிலரிடம் விலங்கு குணத்தாக்கம் குறையும். அவர்கள் பிறர் நலனுக்காக தங்கள் நலனை விட்டுத்தரும்படி வளர்ந்திருப்பார்கள்.
இன்னும் சிலர் விலங்கு குணத்தை முற்றாகக் கடந்துவந்து தெளிந்த நிலையை எட்டியிருப்பார்கள்.
சராசரி வாழ்வில், சாதிக்கும் விருப்பத்தில் இருப்பவர்களுக்கு பிறர் நலனை மையப்படுத்தும் பெருந்தன்மை மிகவும் அவசியம்.
அதே நேரம், தன்னுடைய இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் விழிப்புணர்வும் அவசியம். தற்காப்புக்கான அளவே மிருக குணம் இருந்தால் போதும்.
ஓர் எல்லைக்குப் பிறகு அந்த விலங்கை கொன்று விட்டு ஞானியாலாம்.