வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
தட்பவெட்பம் உங்களுக்குச் சாதகமாக இல்லாத போது…
உங்களின் விருப்பமான காபி சூடாக இல்லாத போது…
உங்களின் திட்டமிடல் லேசாக குழம்பும் போது
புன்னகைப்பது கடினம்தான்…
இதுபோன்ற ஒவ்வாத தருணங்களை புன்னகைகளால் மட்டும் மாற்றமுடியாது.
ஆனால் இவை சூழ்நிலையை இன்னும் மோசமாக்குவதில்லை.
புன்னகைகள் நம்முடைய உற்றதுணையாகிறது.
வறண்ட நம் தருணங்களின் மேல் நீர் பாய்ச்சுகிறது.
பிரச்சினைகள் முடிவுக்கு வரும்போது நாம் அழைக்காமலேயே வந்து ஒட்டிக்கொள்கிறது.
நாம் அனுமதிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் நம் புன்னகையைப் பரிமாறியும் விடுகிறது…
புன்னகைத்தான் பாருங்களேன்!!