வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
வெளிப்படையாய் நடக்கிற ஒன்றை சற்றே அலட்சியமாய் பார்த்தாலும் அடி வயிற்றில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கக் கூடியது, தெருக்கூத்து.
தான் அதிர்ந்து போனதை வெளிக்காட்டாமல் பலர் அவசரம் அவசரமாய் அங்கிருந்து நகர்வார்கள். சிலர் ரகசியமாய் ரசிப்பார்கள். சிலரோ வெளியில் வந்து வேடிக்கை பார்ப்பார்கள்.
வாழ்வில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் பல, நாம் எதிர்கொள்ள விரும்பாதவையாய் இருக்கும். ஆனாலும்கூட அவை நிகழ்ந்தே தீரும்.
வாழ்க்கையில் நம் முன்னே மிக எளிய மனிதர்களாகத் தோற்றமளிக்கிற பலர், செயற்கரிய காரியங்களைச் செய்வார்கள். கோமாளிகள், லாவகமாய் சாகசங்களை செய்வதைப்போல!
பெரிதாகத் தன்னை காட்டிக் கொள்கிறவர்கள் காரியங்களை அதிகம் செய்ய மாட்டார்கள். தெருக்கூத்தின் தலைவனாய் இருந்துகொண்டு, கொட்டு முழக்குவதை மட்டும் செய்பவனைப் போல.
வாழ்க்கை காட்-டும் வித்தைகளிலிருந்து கற்க வேண்டியதைக் கற்றுக்கொண்டும் கைகள் தட்டிக் ரசித்துக்கொண்டும் வாழ்வதே புத்திசாலிகளின் பாணி.