வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் கையடக்கமாய் இருக்கும் குறிப்புகள் அவனுடைய அன்றாட வேலைகளின் நினைவூட்டல் பட்டியலாக இருக்கும்.
அந்தப் பட்டியலுடன் துணையாய் இருக்க வேண்டியது, குறுகிய காலத்தில் எட்ட வேண்டிய கனவுகளின் பட்டியல்.
நம் வாழ்வின் நோக்கம் பற்றிய வழி காட்டுதல், உள்மனதுக்கு எப்போதும் வேண்டும். அந்த வழிகாட்டுதலுக்கு வழிதான், கையடக்கமாய் சில கனவுகள்.
முதன் முதலாக நீச்சல் பழகுபவர்கள் அதிகம் ஆழமில்லாத இடத்தில் பயிற்றுவிப்பது மாதிரி, கையடக்கமான கனவுகளை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளத் தொடங்கலாம்.
சற்றே பெரிய நோக்கத்துடன் யார் தங்கள் அன்றாட வேலைகளை செய்கிறார்களோ, அவர்களே, பெரிய மனிதர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
கனவுகளில் சின்னச் சின்ன அடிகள் தொடங்கி பெரிய பெரிய படிகளில் பாதங்கள் பதித்துக் கொண்டே இருங்கள்… சீக்கிரம் சந்திப்பீர்கள் சிகரத்தின் உச்சியை!!