வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
எழுதிப் போட்டு வாங்குகிற பதிலுக்கும் எதிரே நின்று கேள்வி கேட்டு வாங்குகிற பதிலுக்கும் என்ன வித்தியாசம்? கேட்ட மறுநொடியே கிடைக்கும் பதிலில் உண்மை இருக்கும். முதல் வகை பதிலில் சாமர்த்தியம் இருக்கும். இதுதான் வித்தியாசம்.
குறிப்பாக சேவைத்துறையில் இருப்பவர்களிடம் புகார் செய்யும் வாடிக்கையாளர்கள், செயலைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர, சாமர்த்தியத்தை அல்ல.
சமத்காரமாக வாதம் செய்து சாமர்த்தியமாகப் பூசி மெழுகுபவர்கள் வாதத்தில் வெல்லலாம். வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை வெல்ல முடியாது. ஒரு சூழலை எதிர் கொள்ள சரியான வழி செயல்புரிவது மட்டுமே.