வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
புதிதாய் சந்திப்பவர்களிடம் விசாரிக்கக் கூடாத விஷயங்கள் இரண்டு & சாதி, வியாதி.
பொது இடத்தில் வைத்து சராசரி மாணவர்களிடம் விசாரிக்கக் கூடாதது & மதிப்பெண்.
அதிகம் அறிமுகமாகாத ஆண்களிடம் விசாரிக்கக் கூடாதது & சம்பளம்.
அதிகம் அறிமுகமில்லாத பெண்களிடம் விசாரிக்கக் கூடாதது & வயது.
பெரியவர்களிடம் கேட்கக்கூடாத கேள்வி & பிள்ளைகள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா?
இவையெல்லாம் நாகரீகம் சார்ந்த அம்சங்கள். அதேபோல, வாழ்வில் உயர்ந்த ஒருவர், குறுக்கு வழியில்தான் முன்னேறி இருப்பார் என்ற முன்முடிவுடன் அணுகுவதும், குறுகிய மனப்பான்மையைக் குறிக்கும்.
அவரவர் மத நம்பிக்கையை, அரசியல் சார்புகளை பொதுவில் விமர்சிப்பதும் உறவுகளின் சமநிலையைக் குலைக்கும்.
சகமனிதரின் பழக்க வழக்கங்கள் அவருடைய தனிப்பட்ட விஷயங்கள். மனம் விசாலமடைந்தன் அடையாளமே தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்காததுதான்.