வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

கழிப்பதன் மூலம் கூட்டுவதற்குக் கற்றுக் கொள்வதுதான் உங்கள் தனித்தன்மையை உயர்த்தும்.

வேண்டாத பழக்கங்களையும் கூடாத உணவு வகைகளையும் கழித்தால், ஆரோக்கியம் கூடும்.

வேண்டாத குணங்கள் கொண்ட மனிதர்களை தொடர்பிலிருந்து கழித்தால் நிம்மதி கூடும்.

வேண்டாத அரட்டைகளையும் வீணான கேலிகளையும் கழித்தால் சொந்தங்கள் கூடும்.

வேண்டாத சந்தேகத்தையும் முகம் சுருக்கும் முன்கோபத்தையும் கழித்தால் சொந்தங்கள் கூடும்.

கூடுதல் உடல் சுமையை உடற் பயிற்சியாலும் கூடுதல் மனச்சுமையை தியானத்தாலும் கழித்தால் ஆயுள் கூடும்.

நேரத்தை விரயம் செய்யும் பழக்க வழக்கங்களை கழித்தால் ஆதாயம் கூடும்.

சக மனிதர்களிடம் குறை காணுகிற மனோபாவத்தைக் கழித்தால் நல்லெண்ணம் கூடும்.

சபலம் சலனம் போன்றவற்றை மன வயலில் இருந்து கழித்தால் வாழ்வின் அர்த்தம் கூடும்.

சந்தேகம், தயக்கம் போன்ற தடைகளை விழிப்புணர்வுடன் கழித்தால் சாதனையின் அளவுகள் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *