வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சின்ன வயதில் விடுகதைகளைக் கற்றுக் கொடுத்ததன் நோக்கமே, ஒரு புதிர் போடப்பட்ட விநாடியிலிருந்து பதிலைநோக்கி நகர வேண்டும் என்பதற்காகத் தான்.
கேள்விக்குள்ளேயே வட்டமடித்துக் கொண்டு வாடி நிற்பது ஒருவகை. கேள்வியிலிருந்து பதிலை நோக்கி நகர்வது இன்னொரு வகை.
வாழ்க்கை புதிர்போடும் நேரங்களில் எல்லாம் பதிலாக வருகிறீர்களா என்று பாருங்கள். எத்தனை கோணங்களில் முடியுமோ அத்தனை கோணங்களிலும் தேடுங்கள்.
உங்களை நீங்களே ஒரு கேள்வி கேளுங்கள். தீர்க்க முடியாத பிரச்சினை என ஏதும் இருக்கிறதா? உண்மையில், தீர்க்க முடியாத பிரச்சனை ஏதுமில்லை. தீர்க்க முடியாது என்னும் எண்ணத்தில்தான் பிரச்சினை.
வாழ்க்கை பல நேரங்களில் புதிர் போடலாம். நீங்களே பதிலாய் மலருங்கள்.