வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
‘நடுத்தரம்’ என்பது வயதிலோ வாழ்க்கையிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. சுய முயற்சியால் கையூன்றி மேலே வருகிறமனிதர் வாழ்நாள் முழுவதும் பொருளாதார வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே இருப்பாரென்று சொல்ல முடியாது.
ஆனால் தன் பொருளாதார நிலை பற்றியோ சமூக அந்தஸ்து பற்றியோ தயக்கம் & தாழ்வு மனப்பான்மை & தடுமாற்றம் & தடை ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே அந்த மனிதரின மனச்செழுமைக்கு மகத்தான அடையாளம்.
யார் ஒருவருக்கு தன்னுடைய மதிப்பு தெரிகிறதோ அவர் புத்துணர்வைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்.
உலகம் முழுதும் அவருக்கு உறவுகள் மலர்கின்றன. அவரின் வசீகரமான பேச்சுக்கும் பாவனைக்கும் வாய்ப்புகளின் வாசல்கள் திறக்கின்றன.
வயதும் பொருளாதாரமும் நடுத்தரமாய் இருந்தாலென்ன? நீங்கள் முதல்தரமான மனிதராய் மலருங்கள்.