வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
“நம்புங்கள்” எனச்சொல்லும் பிம்பங்கள் நிஜத்தின் பிரதிபலிப்புதான் என்பதை நம்புங்கள். பிம்பங்களை நம்புவதில் உங்களுக்குக் கிடைக்கும் பயன், அது நிஜத்தின் நிஜமான தோற்றத்தை நினைவூட்டும்.
எது இருக்கிறதோ அதுவே பிம்பமாய் பிரதிபலிக்கும் என்பதால் நிஜமான ஒன்று இருக்கிறது என்கிற நம்பிக்கை. பிம்பங்களைப் பார்க்கிறபோதெல்லாம் பிறக்கிறது.
பூக்கள், கடவுளின் பிம்பங்கள்.
குழந்தைகள், நம்பிக்கையின் பிம்பங்கள்.
அதிசயங்கள், நிகழ முடியாதவைகூட நிகழலாம் என்னும் சாத்தியத்தின் பிம்பங்கள்.
கடின உழைப்பு என்னும் உண்மையின் பிம்பமே வெற்றி.
இப்படி, பிம்பங்களிலிருந்து அதன் மூலமாக நிஜத்தை நோக்கி நீங்கள் பயணம் நிகழ்த்தப் பாதை அமைப்பதால், பிம்பங்களை நம்புங்கள்.