வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
நமக்கிருக்கும் புலன்களை சரியாகத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். குறிப்பாக நம் கண்கள். விமான நிலையத்தில் பெட்டிக்குள் இருப்பதை சில விநாடிகளில் ஸ்கேன் செய்யும் கருவியைவிட, பலமடங்கு கூர்மையானவை கண்கள்.
ஓர் இடத்தைப் பார்க்கும்போது, சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் பார்த்து மூளையில் பதிய வைத்துக் கொள்வது, நினைவாற்றலை மேம்படுத்தும் வழி. அது மட்டுமல்ல உங்களின் உள்வாங்கும் திறனும் பலமடங்கு பெருகும்.
ஒருவரின் முகத்தைப் பார்த்தே, அவர் மனதில் என்ன ஓடுகிறது என்பதைக் கண்டறியும் சாமர்த்தியம், கண்களுக்கும் மனதுக்கும் நடுவிலான ஒத்திசைவில் சாத்தியம்.
புலன்கள் என்னும் கருவிகளைப் புரிந்து பயன்படுத்தினால் புதையலெடுக்க முடியும்… ஒவ்வொரு நாளும்!!