வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
விதைத்தவை எல்லாமே விளைந்து விட்டால் வயல்களில்கூட இட நெருக்கடி ஏற்படும். நாம் சில முயற்சிகளை விதைக்கும்போது எப்போதோ ஏற்படுகிற தோல்விகள், ‘இது ஏன் நிகழ்ந்தது’ என்கிற கேள்வியை எழுப்பும்.
காரணங்களை உள்ளம் கண்டறியும். களையெடுக்க வேண்டிய தவறுகளைத் துல்லியமாய் கண்டுபிடிக்கும்.
விதைத்ததெல்லாம் விளைந்து விட்டால் இந்த விசாரணை இருக்காது. தவறுகளைத் திருத்திக்கொள்கிற தூண்டுதல் பிறக்காது.
மாற்று யோசனைகளால் மனித குலம் பல தடைகளைத் தாண்டி வந்தது சின்னச் சின்ன தோல்விகளால் தான்.
பொதுவாக, நாம் யோசித்த ஒன்றில் தடை ஏற்பட்டால், உடனடியாக இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும். முதலாவது அந்தத் தடையைத் தாண்டுவதற்கான வழிவகைகளை முழு வீச்சில் தூண்டிவிட வேண்டும்.
இன்னொரு பக்கம், இந்தத் தவறு சரிசெய்யப்பட்ட பிறகு எப்படி மளமளவென்று முன்னேறுவது என்பதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
போனவரை போகட்டும்… அறுவடைக்குத் தயாராகுங்கள்.