வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
உங்களிடம் எதையோ சொல்லத் தயங்குபவர்கள், நீங்கள் “என்ன” என்றதும் “ஒன்றுமில்லை” என்று நகர்கிறார்களா?
மற்றவர்கள் உங்களிடம் சகஜமாகத் தொடர்பு கொள்வதில் ஏதோ சிக்கல் இருப்பதாகப் பொருள். ஏனெனில், ஒன்றுமில்லை என்று ஒன்றுமில்லை. நீங்கள் வகிக்கும் பொறுப்பு, உங்களுக்கிருக்கும் அதிகாரம், அந்தஸ்து ஆகிய எதுவும் உங்களை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
சில சமயம், வீடுகளில் குழந்தைகள் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் போது, பெரியவர்கள் “என்ன” என்று கேட்டால், அவர்கள் “ஒன்றுமில்லை” என்று பதில் சொல்வார்கள். அதற்கு அர்த்தம், “உங்களுக்கு சொல்ல “ஒன்றுமில்லை” என்பதுதான்.
இதை இயல்பாகப் புரிந்துகொண்டு சிரித்தபடியே நகர்ந்துவிடலாம். சக மனிதர்கள், சக பணியாளர்கள் நடுவில் இந்த இடைவெளி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள்.