வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

அரட்டை என்னும் ஆபத்தான பழக்கத்தை ஆசை ஆசையாய் பழகிக்கொண்டு அதனை ஆரவாரமாய் நிகழ்த்தியும் காட்டும் வேடிக்கை மனிதர்கள் உலகம் முழுவதிலும் உண்டு.

இவர்களுக்கு சுயமாய் சாதிக்க சக்தியில்லை. சாதித்தவர்களை மதிக்கும் புத்தியில்லை. இத்தகைய மனிதர்கள் அனாவசியமான குப்பைகளை வாங்கி வைத்துக் கொள்ளும் குப்பைத் தொட்டிகள்.

சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். இந்த கால்முளைத்த குப்பைத் தொட்டிகள் பழைய குப்பைகளையும் அகற்றுவதில்லை. புதிய குப்பைகளை விடுவதுமில்லை.

அடுத்தவர் பற்றிய அவதூறு என்பதே, அழுகிப்போன மனங்களில் இருந்து கிளம்புகிற நாற்றம்.

நடந்ததைப் பேசி நாத்தழும்பேறி தங்கள் வாழ்வையும் இருப்பையும் எதிர்மறை அதிர்வுகளால் நிரப்புவதில் குதூகலம் காணும் குப்பைத்தொட்டிகளை விட்டு விலகுங்கள்.

பொறாமை, காழ்ப்பு, வயிற்றெரிச்சல் போன்ற தொற்றுநோய்களை உருவாக்கும் அத்தகைய மனிதர்களிடம் இருந்து தள்ளியே நில்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *