வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சுவைக்காக உண்ணுவது ஒரு வயது, சுவைக்காத உணவையும் அதன் தன்மைக்காக உண்ணத் தொடங்க வேண்டியது நடுத்தர வயது. தொடக்கத்தில் சிரமமாய் இருந்தாலும் உண்ண உண்ண அதன் அசல் சுவை பிடிபடும்.
ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உணவு முறைகளில் மாறுதல் செய்வது அவசியம்.
பச்சைக் காய்கறிகள், நார்சத்துக்கான உணவு, ஒரு மணிநேர இடைவெளியில் தண்ணீர் என்று சில நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்வது மிகவும் அவசியம்.
உணவு என்பது நம் ஓட்டத்திற்காக எரிபொருள் ஆக வேண்டுமே தவிர நாம் சுமந்து செல்ல வேண்டிய பாரமாய் மாறிவிடக் கூடாது.
நாம் உண்ணுகிறஉணவு நம்மை உண்டுவிடக்கூடாது. அஃறிணைகள் என்று நாம் அழைக்கிற உயிரினங்கள் தங்களுக்கேற்ற உணவை உள்ளுணர்வால் தேர்வு செய்கின்றன.
மனிதனுக்கும் உள்ளுணர்வு உண்டு. அதனை அலட்சியத்தால் மழுங்கடித்து விட்டதால் இப்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடக்கின்றன.
உணவை நீங்கள் உண்ணுங்கள்
உணவுக்கு உணவாகாதீர்கள்.