வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
ஓய்வு என்றால் உறங்குவது மட்டுமல்ல புலன்கள் இளைப்பாறி புத்துணர்வு கொள்வது. ஊருக்கு வெளியே இயற்கையின் மடியிலோ பரந்து விரிந்த புல்வெளியிலோ கொஞ்ச நேரம் நல்ல இசை கேட்பதோ கூட ஓய்வுதான்.
வாழ்க்கை பல நேரங்களில் பரபரப்பான ஓட்டத்தை மேற்கொள்ளச் செய்து உங்களை உந்தித்தள்ளுகிறது. அப்போதே நீங்கள் காட்டுகிற நிதானம் உங்களுக்கு நிறைந்த புத்துணர்வை பரிசாகத் தருகிறது.
நீங்கள் சக்தியை சேமிக்கும் விதமாய் எதை விரும்பிச் செய்தாலும் ஓய்வுதான்.
புத்தகம் படிப்பது புத்துணர்வு தரும் பழக்கம். இதமான இசை கேட்பது இதயத்திற்கு அமைதி தரும் ஓய்வு. பாலய கால நண்பர்களுடன் பேசிச் சிரிப்பது, வாழ்வின் வசந்தங்களை மீட்டுத் தருகிறஓய்வு.
இந்த ஓய்வுக்கு நீங்கள் தயாராகிற போது உங்கள் வாழ்க்கை முறையை மிகவும் ஆக்கபூர்வமாய் நடத்திச் செல்கிறீர்கள்.
உங்களை இந்த உலகின் அதிர்வுகளோடும் இயக்கத்தோடும் இணைந்து தினம் தினம் புதுப்பிக்கிறது ஓய்வு. ஓய்வின் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உடல் நலமாக வேண்டும். உள்ளம் வளமாக வேண்டும்.