வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
எதிர்ப்படும் முகங்களில் நாம் எதையெதையோ தேடுகிறோம். சில பேரின் சாயலை சிலரிடத்தில் தேடுவது முதல்படி “நீங்கள் இன்னார் மகனா” என்று விசாரிக்கிறோம். சில சமயங்களில் நம் கனிப்பு சரியாகவே இருக்கும்.
இன்னொரு பக்கம், இத்தகைய தோற்றம் இருப்பவர்கள், இந்த விதமான குணத்தில்தான் இருப்பார்கள் என்றமுன் முடிவு. ‘ரொம்ப சாதுவா இருந்தாரு திடீர்னு கோவிச்சுக்கிட்டாரு’, இது அவருடைய தவறல்ல, உங்கள் முன் முடிவின் தவறு-.
ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை உண்டு. தனி சிந்தனை, அதற்கேற்ற செயல்பாடு, எல்லாமே உண்டு. நம்-முடைய அபிப்பிராயங்கள், யூகங்கள், ஆகியவற்றை அடுத்தவர்களிடம் எதிர்பார்த்து அதற்கேற்ப அவர்கள் இல்லை என்று வருந்துவதால் எந்தப் பயனும் இல்லை.
சக மனிதர்களுக்கு நாம் தரக்கூடிய அதிகபட்ச மரியாதை, அவர்களை அவர்களாகவே பார்ப்பதுதான்.
படைப்புகள் பலகோடி விதங்கள் என்பதை உணருங்கள். அவர்கள் முகங்களில் அவர்களையே பாருங்கள்.