வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
“துரத்திய -குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை தொலைதூரம் ஓடின” என்றார் விவேகானந்தர். குரங்குகள் மட்டுமல்ல. குரங்குக் குணங்களும் கூட மிரள்பவர்களைத்தான் மிரட்டுகின்றன.
தடை, சவால், எதிர்ப்பு போன்ற எல்லா சூழல்களும் மிரள்பவர்களை மிதிக்கவே செய்கிறது. எவ்வளவுதான் சவாலான சூழல் அமைந்தாலும் அதனை திடமாக எதிர்கொள்ளும் தீர்மானமே அந்த சூழலிலிருந்து மீட்டெடுக்கிறது.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு நதியுடன் ஒப்பிடுங்கள். நதியில் வரும் சூழல் போன்றது வாழ்வில் வருகிறசூழல். அந்த சூழலிலிருந்து மீள்பவர்க—ளுக்கு நதியில் நீராடுவது ஆனந்தம். சவாலான சூழலிலிருந்து மீள்பவருக்கு வாழ்க்கை ஆனந்தம்.
உலகின் உன்னத சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் அச்சத்தை அகற்றச் சொன்னதன் அடிப்படை இதுதான்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது போலவே சில சூழல்களில் துணிவை வெளிப்படுத்த வேண்டும்.
மிரட்சியை விரட்டுங்கள். மகிழ்ச்சி மலரும்.