வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
மனிதர்கள் மீதான நம் அபிப்பிராயங்களுக்கு சில சம்பவங்களே அடிப்படை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை. சூழ்நிலையின் வெளிப்பாடே சம்பவம்.
குறிப்பிட்ட காரணத்தால் இன்று நம் மனதில் கசக்கக் கூடிய ஒருவரின் பக்குவம் நாளை கனியலாம். ஆனால் அவர் பற்றி நமக்கு தொடக்கத்தில் எழுந்த அதே அபிப்பிராயத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவரின் நல்ல அம்சங்களைத் தவற விடுவோம்.
உறவுகள் பகையாவதும், பகைவர்கள் உறவாவதும் இயல்பானது. பார்த்த முதல் நாளில் பாறையாய் இருந்தது, சில மாதங்களிலேயே சிற்பமாகும். அன்று நாம் அலட்சியமாகப் பார்த்த அதே பாறைக்கு ஆறு மாதங்கள் கழித்து நாமே அர்ச்சனை செய்யலாம்.
எனவே, எப்போதோ நம் மனதில் எழுந்த கோபம் எப்போதும் நிலையாயிருப்பது நியாயமில்லை. நிலையில்லாத தன்மைதான் வாழ்க்கையின் வசீகரம்.
மனிதர்களின் மாற்றங்களை மதியுங்க. பழைய கோபங்களை உரிய நேரங்களில் உதிர்த்துவிடுங்கள். இதில் நன்மை உங்களுக்கே!!