வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
பாசாங்கான அடக்கம் ஆபாசம். அடங்காத அகந்தை இயல்பு. மனதில் எழுகிற அகந்தையை இயல்பானதென ஏற்கும் போதுதான் உங்களால் அதைத் தாண்டி வரமுடியும்.
எனக்கு அகந்தை இருக்கிறதே என்று பதட்டம் கொள்வதால் பயன் கிடையாது. அது இயல்பானது. ஆனால் அதைத் தாண்டி வரவேண்டும்.
இதற்கு முதல்படி, நம்மைவிட பலமடங்கு பெரிதாக சாதித்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது. அவர்களுடன் ஒப்பிடும் போது நம் செயல் சாதாரணம் என்பதை நாமே உணரமுடியும். அப்போது அகந்தை மெல்ல அகன்று பணிவு வளர்கிறது.
உள்ளிருந்து தானாக எழும் பணிவு நம்மை பலமடங்கு வலிவுள்ளவர்களாகவும். பொலிவுள்ளவர்களாகவும் ஆக்கிவிடும். அதன்மூலம் இன்னும் உற்சாகமாய் செயல்பட முடியும்.
யாரிடம் பணிவு, பாசாங்கில்லாததாய் அமைகிறதோ அவர்கள் பிறரை வெகு சுலபமாக ஈர்க்கிறார்கள். அவர்கள் ஆரம்பத்திலேயே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்தவர்களெல்லர்.
அகந்தையால் வரும் சிரமங்களை, விழும் அடிகளை கணக்கில்கொண்டு, பணிவு கொண்டு, நிமிர்ந்தவர்கள், அவர்களுக்கு சாத்தியமானது உங்களுக்கும் சாத்தியம்.