வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
வாழ்வின் சில சூழல்கள் போராடும்படி இருக்கும் அதை வைத்து வாழ்க்கையே போராட்டம் என் அலுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையின் சுவாரசியத்தை தவறவிடுகிறார்கள்.
கோடை வெய்யிலில், மதியம் பத்துப்பேருக்கு திடீரென்று விருந்து சமைக்கும் நிர்ப்பந்தம் ஓர் இல்லத்தரசிக்கு உருவாகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்.
வெய்யில் சூடும், அடுப்புச் சூடும் வாட்ட, உஷ்ணத்துடன் போராடிக் கொண்டே சமைத்துப் போ-டுவார். அந்த உணவில் நான்கு பேர் சாப்பிடப் போகிறார்கள் என்ற உணர்வு சமைத்து முடித்தபின் ஜெயித்த உணர்வை அவருக்குள் கொடுத்தால் அவர் வாழ்வில் போராடுபவர்.
வந்தவர்கள் சாப்பிட்டுப் போன பிறகும் தன் சமையலறைத் துன்பத்தை நினைத்து சலித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தால் அவர் வாழ்க்கையுடன் போராடுபவர்.
மற்றவர்கள் அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒவ்வொ-ரு போராட்டத்திலும் தான் வென்று வருவதை உணர்ந்து உற்சாகம் பெறுவார்கள் சாதனையாளர்கள்.
வாழ்வில் வரும் போராட்டங்களை பார்த்து இந்த வாழ்வே போராட்டம்தான் என்று வருந்திக் கிடப்பவர் சாதாரண மனிதர்கள்.
வாழ்வில் போராடுங்கள்! வெற்றி வீரராய் மலருங்கள்.