வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
புதிதாக ஓர் இடத்துக்குப் போகிறீர்கள். அங்கே ஏற்கெனவே போன ஒருவர், அதற்கான சில அடையாளங்களை சொல்வது, அந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி சென்று சேர்வதற்காகவே தவிர அந்த அடையாளங்களிலேயே நின்று வருவதற்காக அல்ல.
பாஞ்சாலி முன்னர் அரண்மனையில் துரியோதனன் பளிங்குத்தரையை நீச்சல் குளமென்றும் நீச்சல் குளத்தை பளிங்குத்தரையென்றும் எண்ணி ஏமாந்ததைப் போல் வாழ்வின் பல தருணங்களில் நாம் துரியோதனனாய் தடுமாறுகிறோம்.
இது ஏன் தெரியுமா? கண்ணெதிரே தோன்றுகிற நிதர்சனம் ஒருபுறம். உங்களுக்கு கற்பிக்கப்பட்ட அடையாளங்கள் மறுபுறம். இந்த அடையாளங்களின் ஆளுமையை அகற்றாத போது உண்மை நிதர்சனமாய் இருக்கும் போதும் பலருக்கு தரிசனம்
ஆவதில்லை.
ஒரு விஷயம் நமக்கு முன்னதாகவே தெரியும் என்கிறபிம்பம் தெரிந்து கொள்ளவிடாமல் தடுக்கிறது. “என்னைத் தெரிகிறதா?” என்று கேட்கிறஒருவரை, “நன்றாய்த் தெரிகிறதே” என்று சொல்லி, தெரியாமலேயே பேசுவோமே அதுபோலத்தான் இதுவும்.
எனவே உள்ளதை உள்ளபடி பாருங்கள். உலகம் உங்களுக்காக சுழலத் தொடங்கும்.