இணையதளம் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் வழியாகவும், உணர்ச்சிமிக்க வசனங்கள் வழியாகவும், அதிரடியான பாடல்கள் வழியாகவும் சமூகத்திற்கு சில முக்கியமான செய்திகள் சொல்லப்படுகின்றன.
1. யாராக இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் செய்கிற வேலையை மதிக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு எது வாழ்க்கை கொடுக்குமோ அதுவே வாழ்க்கையைக் கெடுக்கும்.
2. சமூக ஊடகங்களில் எல்லை மீறிய ஈடுபாடு காட்டும் போது அது நம்மை இயக்கத் தொடங்குகிறது. வயது பேதம் அந்தஸ்து பேதமின்றி இந்த போதை ஆட்கொள்ளும். ஆளையும் கொல்லும். எனவே எச்சரிக்கை அவசியம்.
3. அடுத்தவர்களுக்கு ஆபத்து விளைவிக்க வாள் எடுப்பவன் வாளால் மடிவான். சமூக விழிப்புணர்வின்றி மௌஸ் பிடிப்பவன் மௌஸாலேயே மடிவான்.
4. வெறும் யூகங்களின் அடிப்படையில் சில பொது விஷயங்களிலும் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களிலும் அவதூறு பரப்புவது போல் ஆபத்தான செயல் எதுவுமில்லை.
5. முகநூல் வாட்ஸப் போன்றவற்றில் நாம் முகமற்றவர்களாகத்தானே இருக்கிறோம் என்னும் அசட்டுத் துணிச்சல் அநேகம் பேர்களுக்கு இருக்கிறது. ஆனால் மறந்து விடாதீர்கள் உங்கள் முகம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதேநேரம் உங்கள் முதுகுக்குப் பின்னர் சில கண்கள் உங்களைக் கண்காணிக்கும். இது உங்களுக்குத் தெரியாமலேயே நடக்கலாம்.
6. மனிதர்களுக்கு இருக்கும் சின்னச் சின்ன குறைகளோ ஊனங்களோ அவர்களை நேசிக்க எவ்விதத்திலும் தடையாகாது.