வீரம் ததும்பும் வேட்டை நாயாய்க்
குரைப்பது எனக்குச் சுலபம்
ஆனபோதும் என்ன செய்ய?
ரொட்டித் துண்டில் சபலம்!
எனக்கே எனக்கென எழுதும் கவிதைகள்
எல்லோருக்கும் பிடித்திருக்கின்றன
எல்லோருக்குமாய் எழுதும் கவிதைகள்
எனக்கு மட்டுமே பிடித்திருக்கின்றன
சொல்ல நினைத்தேன் – சொல்லவில்லை!
செய்ய நினைத்தேன் – செய்யவில்லை!
வெல்ல நினைத்தேன் – வெல்லவில்லை!
வீழ்த்த நினைத்தேன் – வீழ்த்தவில்லை!
கொல்ல நினைத்தேன் – கொல்லவில்லை!
கொடுக்க நினைத்தேன் – கொடுக்கவில்லை!
நிறைய நினைத்தேன் – நிறையவில்லை!
ஒன்று நினைத்தேன்… – ஒன்றுமில்லை!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…