மூடியிருக்கும்
மொட்டைப் போல
மௌனம் கூடாது;
ஊறியிருக்கும்
ஆசை மதுவும்
ஆறக் கூடாது;

வாடியிருக்கும்
மனசைப் பார்த்தும்
விலகக் கூடாது – என்
வாழ்வின் மழையே
இறங்கி வா வா
இனிமேல் தாங்காது!

மூடமறுக்கும்
இமைகள் இரண்டும்
துளியும் தூங்காது;
மோக போதை
ஏறிய நெஞ்சில்
தாகம் தீராது;

பாடிய கவிதை
வரிகளிலே என்
பாரம் இறங்காது;
பௌர்ணமிப் பெண்ணே                      வெற்றிக்கோப்பைகள்
நீயில்லாமல்                                                        வாங்கும் போது
பொழுதும் போகாது;                                        வேதனை படர்கிறதே
வெல்ல வேண்டிய
புதையலை விட்ட
வலியும் தொடர்கிறதே!
ஒற்றை யானை
போலே எந்தன்
உள்ளம் அலைகிறதே;                      கற்றுக் கொண்ட
உள்ளுக்குள்ளே                                                     கணக்குகள் எல்லாம்
ஊமைக்காயம்                                                   காதலில் பொய்தானே
ரணமாய்க் கசிகிறதே;                       கழித்ததை மீண்டும்
பெருக்கிப் பார்த்தால்
கனவுகள் சுமைதானே!

பற்றிக் கொள்ள
நீயிருந்தால் என்
பதட்டம் தணிந்து விடும்;
பக்கம் நெருங்கத்
தயங்காதே இந்தப்
பனிமலை எரிந்து விடும்.
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *